உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விதிகளை பின்பற்றினால் விபத்தை தவிர்க்கலாம்: ஆர்.டி.ஓ.,

சாலை விதிகளை பின்பற்றினால் விபத்தை தவிர்க்கலாம்: ஆர்.டி.ஓ.,

சோழவரம்:தேசிய நெடுஞ்சாலையில் கவனமாக பயணிப்பது, தலைக்கவசம் அணிவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று புதிதாக ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பது உள்ளிட்டவைகளுக்காக வந்த வாகன ஓட்டிகளுக்கும், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கும், சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்நது. இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, ஆறு நொடிகளுக்கு ஒருமுறை பக்கவாட்டு கண்ணாடிகளை கவனிக்க வேண்டும். சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள வெள்ளைக் கோடுகளை கவனிக்க வேண்டும். காரில் பயணிப்போர் கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சமீபத்தில், செங்குன்றம் பகுதியில் நடந்த சாலை விபத்தில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர் உயிர் தப்பினார். பின்னால் அமர்ந்திருந்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். எனவே, சாலை விதிகளை முழுமையாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி