உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெற்பயிரில் கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு ஆலோசனை

நெற்பயிரில் கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு ஆலோசனை

பொன்னேரி:மீஞ்சூர் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட பொன்னேரி, கோளூர், மெதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா பருவத்திற்கு, 33,200 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.மழை, பனி, வெயில் என, பருவநிலை மாறி மாறி வரும் சூழலில், நெற்பயிர்கள் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதா என, நேற்று, வேளாண்மைத் துறையினர் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலாதேவி, தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் ரமேஷ், திருவூர் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் சுதாசா, மீஞ்சூர் வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் மற்றும் வேளாண் அலுவலவர்கள் விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள நெற்பயிர்களை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது, தொடர் மழையின் காரணமாக விளைநிலங்களில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியதால், துத்தநாக சத்து குறைபாடு ஏற்பட்டு, நெற்பயிர்களில் நுனி கருகல் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.அதையடுத்து, விவசாயிகளிடம், நுனிக் கருகலை கட்டுப்படுத்த, 1 ஏக்கருக்கு, 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேடு ஆகியேவற்றை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிப்பான் உதவியுடன் இலைகளின் மீது தெளிக்கும்படி ஆலோசனை கூறினர்.மேலும், தொடர் பாதிப்புகள் இருந்தால், தகவல் தெரிவிக்கவும் எனவும் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை