உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு பிரிவு போலீசார், அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள நேதாஜி நகரில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை கைது செய்த போலீசார், 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருத்தணி நேதாஜி நகரைச் சேர்ந்த ஓம்குமார், 42, என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை