உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் 14 கிராம சாலைகள் புதுப்பிக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு

கும்மிடியில் 14 கிராம சாலைகள் புதுப்பிக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்த சாலைகள் சில, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது.இந்த சாலைகள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளன. அவற்றில், முதல் கட்டமாக, 14 சாலைகளை தேர்வு செய்து புதுப்பிக்கும் பணிக்காக, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதன்படி கீழ்க்காணும் சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. ↓தம்புரெட்டிபாளையம் முதல் சின்னநத்தம் வரையிலான 3.2 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் என்.எஸ்.நகர் வரையிலான 2.48 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் கெட்ணமல்லி வரையிலான 1.65 கி.மீ., சாலை ↓தண்டலச்சேரி முதல் முத்துரெட்டிகண்டிகை வரையிலான 2.7 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் சிறுபுழல்பேட்டை வரையிலான 2.4 கிமீ., சாலை ↓பூவலை முதல் தண்டலம் வரையிலான 2 கி.மீ., சாலை ↓பல்லவாடா காலனி முதல் கொண்டமாநல்லுார் வரையிலான 2.0 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் கண்லுார் வழி ஆரணி வரையிலான 4.17 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் பூவலம்பேடு வரையிலான 1 கி.மீ., சாலை ↓சாணாபுத்துார் முதல் அல்லிப்பூக்குளம் வரையிலான 1.2 கி.மீ., சாலை ↓கே.எஸ்., சாலை முதல் பொம்மாஜிகுளம் வரையிலான 1.2 கி.மீ., சாலை ↓தாணிப்பூண்டி முதல் பண்ணுார் வழி வாணியமல்லி வரையிலான 1.6 கி.மீ., சாலை ↓ராமச்சந்திராபுரம் முதல் பண்ணுார் வரையிலான 2.1 கி.மீ., சாலை ↓பூவலம்பேடு முதல் வாணியமல்லி வரையிலான 2.88 கி.மீ., சாலை.இந்த சாலை புதுப்பிப்பு பணிகளுக்கு விரைவில், 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ