மேலும் செய்திகள்
சிறு குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
23-Sep-2025
வெங்கத்துார்:வெங்கத்துார் பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும் கால் வாய் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், அம்பேத்கர் நகர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடம்ப த்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்கு உட்பட்டது அம்பேத்கர் நகர். இப்பகுதியில் உள்ள இரண்டாவது தெருவில், 75க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 2022 - 23ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாயில், 80 மீ., நீளத்தில் கான்கிரீட் சாலை மற்றும் கால்வாய் பணி நடந்து வந்தது. இந்த பணி முழுதும் நிறைவடையாமல், அரைகுறையாக விடப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு ஆண்டுகளான நிலையில், இதுவரை முழுமை பெறவில்லை. இதனால், மழைக்காலங்களில் சேதமடைந்த சாலையில் மழைநீர் குளமாக தேங்குகிறது. இப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, வெங்கத்துார் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்து, அரைகுறையாக விடப்பட்ட சாலை மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அம்பேத்கர் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Sep-2025