உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அமோனியா கசிவு விவகாரம் கருத்துக்கேட்பு

அமோனியா கசிவு விவகாரம் கருத்துக்கேட்பு

எண்ணுார், சென்னை எண்ணுாரில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.கடந்த டிச., 26ம் தேதி இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.வாயுக் கசிவு கண்டறியப்பட்ட பின், சம்பந்தப்பட்ட ஊழியர்களால் வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள், இதற்கு நிரந்தர தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், 32வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.இதில், எண்ணுார் மக்களின் கருத்து கேட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை