உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத விளையாட்டு பூங்கா

பராமரிப்பில்லாத விளையாட்டு பூங்கா

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், கிளை நுாலகம், கிராம சேவை மையம் ஆகிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 2008 --2009ம் ஆண்டு, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.அதன்பின், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும், பழுதடைந்து, உடைந்து வீணாகியுள்ளது. மேலும் புதர் மண்டி கிடப்பதால் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து சேதமடைந்து குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும் விளையாட்டு பூங்காவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழச்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை