மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
05-Nov-2025
ஆர்.கே.பேட்டை: ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, பஞ்சாட்சர மலையில் உள்ள மரகதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலையில், 700 ஆண்டுகள் பழமையான மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் , ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னாபிஷேகத்தை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீகாளிகாபுரம் கிராம தேவதை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து, பஞ்சாட்சர மலை கிரிவல பாதையில் சிவனடியார்கள் வலம் வந்தனர். அதேபோல், வீராணத்துார் வீரட்டானேஸ்வரர் கோவில், பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.
05-Nov-2025