இருவர் கொலை வழக்கு மேலும் ஒரு சிறுவன் கைது
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் இரண்டு இளைஞர்களை கொலை செய்த வழக்கில், மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டார்.கச்சூர் ஊராட்சி, தெலுங்கு காலனியைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன், 19, ஆகாஷ், 18. கடந்த 18ம் தேதி இவர்கள் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, ஊத்துக்கோட்டையை சேர்ந்த நலம்பாண்டியன், 21, மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்.ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட, கச்சூர் தெலுங்கு காலனியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.