மேலும் செய்திகள்
நாட்டு வெடிகுண்டு வீச்சு: வாலிபர் படுகாயம்
20-Aug-2025
கடம்பத்துார், கடம்பத்துார் அருகே வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில், மூன்று பேர் கைதான நிலையில், நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, 26. கடந்த 20ம் தேதி வீட்டருகே நின்ற சேது மீது, காரில் வந்த மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் படுகாயமடைந்த சேது, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், முகேஷ், 21, அபிமன்யூ, 21, வினோத்குமார், 24, ஆகிய மூவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய, பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த பிரவீன், 21, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
20-Aug-2025