மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
29-Mar-2025
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, கடந்த 13ம் தேதி ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன், 20, தனுஷ், 23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்பாபு, 22, என்பவர் கஞ்சா வாங்கி வருவதற்கு பணம் கொடுத்தது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முகேஷ்பாபுவை கைது செய்தனர்.
29-Mar-2025