உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் நியமனம்

திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் நியமனம்

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் அறங்காவலர்களாக இருந்தவர்களே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஸ்ரீதரன், அறங்காவலர்களாக சுரேஷ்பாபு, மோகனன், நாகன், உஷா ரவி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம், மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது.இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யும் பொருட்டு, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் மூலம், விண்ணப்பித்தவர்களின் பட்டியல் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு அனுப்பினார்.மாநில குழுவின் பட்டியலை அரசு பரிசீலித்து, திருத்தணி முருகன் கோவிலில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக சுரேஷ்பாபு, உஷா ரவி, ஸ்ரீதரன், மோகனன், நாகன் உள்ளிட்ட ஐந்து பேரை தமிழக அரசு மீண்டும் நியமனம் செய்து, நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்குள், அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி