வெள்ள பாதிப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் பியுஷ் ஆனந்த் வந்தார். அவருக்கு மீட்பு படை மைய சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் தலைமையிலான வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து மோப்ப நாய்கள் படை பிரிவின் மோப்ப நாய்களின் சாகசங்களை பார்வையிட்டார். பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம், மீட்பு உபகரணங்கள், வாகன பிரிவு, நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். வாயநாடு நிலச்சரிவு மீட்பு பணி, விஜயவாடா வெள்ள மீட்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் மற்றும் மீட்பு படை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களை பாராட்டினார்.