உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்களா? அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்.எல்.ஏ., மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்களா? அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்.எல்.ஏ., மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனை, கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பின், தேசிய சுகாதார இயக்ககம் வாயிலாக, தரைத்தளம் மற்றும் அதன் மீது நான்கு அடுக்கு கட்டடம் கட்டுவதற்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் கட்டட பணி நிறைவடைந்தது.கடந்த ஏப்., 18ம் தேதி தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக, திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.ஆனால், தற்போது வரை மருத்துவமனையில் பணிகள் முடிவடையாததால், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் புதிய அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.அதன்பின், “மின் இணைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் வெளியேற வசதி, டி.டி.சி.பி.,யிடம் அனுமதி பெறாத நிலையில், பணிகள் முடிவடைந்ததாக கூறி, மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஏன் அவசரகதியில் ஏற்பாடு செய்தீர்கள்,” என, அதிகாரிகளை கடிந்து கொண்டார்.“மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்து மூன்று மாதங்களாகியும், இன்னும் பணிகள் முடியவில்லை. பணியை முடிக்காமல் பொதுப்பணித் துறை, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் என்ன செய்கிறீர்கள். அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்களா,” என, கடுமையாக எச்சரித்தார்.துறை ரீதியாக மருத்துவமனையில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் தருமாறு எம்.எல்.ஏ., சந்திரன் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, ஐந்து அடுக்கு கட்டடத்தில், ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி