ஆம்ஸ்ட்ராங் கொலையாளி ஜி.ஹெச்.,சில் அனுமதி
புழல்:பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 23 பேர், பூந்தமல்லி சிறையில் இருந்தனர். அவர்கள் சில தினங்களுக்கு முன், புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வராஜ், 50, என்பவர், சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வலி அதிகமாக ஏற்பட்டதால் சிறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.