உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் மீஞ்சூரில் லாரிக்கு தீவைத்தவர் கைது

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் மீஞ்சூரில் லாரிக்கு தீவைத்தவர் கைது

மீஞ்சூர்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் அன்பழகன், 44, மற்றும் முருகன், 42. இருவரும், தனியார் டிரான்ஸ்போர்டில் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.ஒன்றரை வருடத்திற்கு முன், முருகன், அன்பழகனிடம், 1.50 லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார். பணத்தை திரும்ப தராமல் முருகன் ஏமாற்றி வந்துள்ளார்.கடந்த, 13ம் தேதி, அன்பழகன் மீஞ்சூர் பகுதிக்கு வந்து, கொண்டக்கரை பகுதியில் லாரியை நிறுத்தினார். அதே சமயம் முருகனும் அங்கு வந்திருந்தார்.அப்போது அன்பழகன், முருகனிடம் கடனை திருப்பி கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் முருகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், அன்பழகன் ஓட்டி வந்த லாரியின் முன்பகுதிக்கு தீவைத்து விட்டு தப்பினார். மீஞ்சூர் போலீசார் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.இது குறித்து அன்பழகன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, முருகனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ