மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான தடகளம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
02-Oct-2024
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களின் வட்டார அளவிலான கலை திருவிழா நேற்று துவங்கியது. ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.ஓவியம், இசை, பாட்டு, கவிதை, பேச்சு, களிமண் சிற்பம் என, பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. ஏற்கனவே, பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர் இதில் பங்கேற்றனர். வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேசலு, கிரிஜா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். இந்த நிகழ்ச்சிகள் நாளை நிறைவு பெற உள்ளன.அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நேற்று வட்டார கலை திருவிழா நிகழ்ச்சி நடந்தது.வட்டார அளவிலான இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்தகட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
02-Oct-2024