உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு கோவிலில் வரும் 12ல் ஆருத்ரா அபிஷேகம்

திருவாலங்காடு கோவிலில் வரும் 12ல் ஆருத்ரா அபிஷேகம்

திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஜன., 12ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும்; அதன் மறுநாள் அதிகாலையில் கோபுர தரிசனமும் நடக்கிறது.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இந்த கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும்.ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.அந்த வகையில், ஆருத்ரா அபிஷேகம், ஜன., 12ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, 34 வகையான பழங்களால், மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் தோன்றுவார், காலை 5:00 மணிக்கு, கோவில் முன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்; அப்போது, கோபுர தரிசனமும் நடைபெறும்.இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பாதுகாப்பு பணிகளை, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ