மேலும் செய்திகள்
குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி
04-Nov-2024
திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் தார்ச்சாலை ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டாண்டாக தார்ப்பெயர்ந்து சுக்குநூறாக காட்சியளிக்கிறது.இந்த சாலை வழியாக அத்திப்பட்டு, காவேரிராஜபுரம் ரங்காபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருவள்ளூர் நகரத்துக்கு வாகனங்கள் வாயிலாக சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோன்று ராமலிங்காபுரம், குன்னவளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அரக்கோணம் செல்ல இந்த தார்ச்சாலை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது இந்த தார்ச்சாலையில் தார்ப்பெயர்ந்து சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் தாமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
04-Nov-2024