உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊர் மக்கள் மீது தாக்குதல் காவல் நிலையம் முற்றுகை

ஊர் மக்கள் மீது தாக்குதல் காவல் நிலையம் முற்றுகை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரேஸ்புரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கிராம மக்களுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம், 55, நரசிம்மன், 52, முனுசாமி, 45 ஆகிய மூவருக்கும் சுடுகாடு பாதை அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் வெள்ளை நிற மகேந்திரா வாகனத்தில் 10 பேர் உருட்டு கட்டை, இரும்பு ராடுகளுடன் வந்து ஊர் மக்களை தாக்கினர்.ஊர் மக்கள் ஒன்றிணைந்து அவர்களை முற்றுகையிட்டு வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது முனிரத்தினம் உட்பட மூவரும் வெளியாட்களை ஊருக்குள் அழைத்து வந்து பிரச்னை செய்ய ஏற்பாடு செய்தது தெரிந்தது.பரேஸ்புரம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை