மேலும் செய்திகள்
ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்
22-Jul-2025
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் கணபதி, 40. ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, மகன் வெற்றியுடன், 14, டூ-வீலரில் தண்டலச்சேரி சந்திப்பில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கணபதி உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றி, சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22-Jul-2025