ஆட்டோ திருடியவர் கைது
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரபாண்டி, 32. ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை, கோட்டக்கரை பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோ மாயமானது. புகாரின்படி வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், ஆட்டோவை திருடி சென்ற புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகரை சேர்ந்த விஜயகுமார், 28, என்பவரை நேற்று கைது செய்து ஆட்டோவை மீட்டனர்.