உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது

திருவள்ளூர்:பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சமூக சேவகர்களுக்கு மாநில முதல்வர் விருது வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் சமூக சேவகருக்கு சுதந்திர தினத்தன்று முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது.விருது பெற விரும்பும் சமூக சேவகர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராக இருக்க வேண்டும். சமூக சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 12ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன், திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, வரும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ