உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உலக மீன்வள தினத்தில் மீனவர்களிடம் விழிப்புணர்வு

உலக மீன்வள தினத்தில் மீனவர்களிடம் விழிப்புணர்வு

பழவேற்காடு:பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மீன்வளத்துறை, மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உலக மீன்வள தினம் பழவேற்காடு பகுதியில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், மீன்வளக்கல்லுாரியின் முதல்வர் முனைவர் ஜெயசகிலா, மத்திய அரசின் தற்போதைய மீன்வளம் மற்றும் மீனவர் சார்ந்த திட்டங்கள், கடல் குப்பையின் தாக்கங்கள் குறித்து விரிவாக பேசினார்.மீன்வளக்கல்லுாரியின் உதவி பேராசிரியர்கள் அருண் ஜெனிஸ், முனைவர் மாசிலன் ஆகியோர் வளம் குன்றா மீன்பிடி முறைகள், மீன்கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மீன்வளக்கல்லுாரி மாணவர்கள், மீன்வள பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். திருப்பாலைவனம் பெடரல் வங்கி கிளை மேலாளர் மீனவர்களுக்கான கடனுதவி மற்றும் மீன்வ சமுதாய மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி உள்ளிட்ட வங்கி திட்டங்களை குறித்து தெரிவித்தார். பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி