ஆயுஷ்மான் பாரத் கருத்தரங்கு
திருவள்ளூர்,திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' மற்றும் டிஜிட்டல் தேவைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:இந்தியாவின் 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதார கணக்கு என்ற குறியீடுகளை மருத்துவமனை மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் சுகாதார குறியீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகியவை, 'மைக் ரோசைட்' எனப்படும் 'நுண் பகுதி' மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த சுகாதார குறியீடுகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் பதிவு செய்திட வேண்டும். திருவள்ளூரை 100 சதவீதம் சுகாதார குறியீட்டை பதிவு செய்த மாவட்டமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சுகாதார குறியீடுகளை சிறப்பாக பதிவேற்றம் செய்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பொன்னாடை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ் - திருவள்ளூர், பிரபாகர் - பூந்தமல்லி, துணை இயக்குநர் - குடும்ப நலம் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.