சகதியான சாலை; மாணவ – மாணவியர் அவதி
மணவூர் ரயில் நிலைய சாலையில் இருந்து அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வழியில், ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கன்வாடி மையம் முதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை மண் சாலையாக உள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், இச்சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால், மாணவ – மாணவியர், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இடம்: திருவாலங்காடு.