உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடன் விண்ணப்பம் மீது தீர்வு காண வங்கிகளுக்கு ஒரு மாதம் கெடு!

கடன் விண்ணப்பம் மீது தீர்வு காண வங்கிகளுக்கு ஒரு மாதம் கெடு!

திருவள்ளூர்:நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என, வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் காலாண்டு கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அனைத்து வங்கிகள் வாயிலாக, 2024 - 25ம் ஆண்டு வழங்கப்பட்ட கடன் அறிக்கை இலக்கு மற்றும் சாதனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கலைஞரின் கனவு இல்ல திட்டம், முதல்வரின் வீடுகள் புனரமைப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி இலக்கு, மாவட்ட தொழில் மையம், மாணவர்களுக்கான வங்கி கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, இந்திய ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் ராதாகிருஷ்ணன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திவ்யா மற்றும் வங்கி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ