உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரிம்பேடு குளக்கரையில் பேனர் ஆக்கிரமிப்பு

கரிம்பேடு குளக்கரையில் பேனர் ஆக்கிரமிப்பு

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தின் தென் மேற்கில் ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கோவிலின் எதிரே பெரிய குளமும் உள்ளது. கொசஸ்தலை ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளதால், ஆண்டு முழுதும் குளம் நிரம்பியே இருக்கும்.குளக்கரையை ஒட்டி, பள்ளிப்பட்டில் இருந்து, நகரி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் பக்தர்கள் தங்களின் பயணத்தின் போது கோவில் கோபுரத்தை தரிசிப்பதும் உண்டு.இந்நிலையில், குளக்கரையில் நெடுஞ்சாலையையொட்டி, பேனர்கள் ஆக்கிரமித்து வைக்கப்படுகின்றன.இதனால், கோவில் கோபுரத்தை தரிசிக்க வரும் பக்தர்கள், குளக்கரையில் பேனர் வைப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ