மதுக்கூடமான கிராம சேவை மையம்
மேல்மணம்பேடு:கிராம சேவை மையம் பராமரிப்பில்லாததால், 'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறியுள்ளது. பூந்தமல்லி ஒன்றியத்தில் மேல்மணம்பேடு ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வந்தது. அதன்பின், 25,000 ரூபாயில் சீரமைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால், செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருவதோடு, 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே, கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.