உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ரயில்வே சுரங்க பாதையில் விபத்தை தடுக்க தடுப்புகள் அமைப்பு

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையில் விபத்தை தடுக்க தடுப்புகள் அமைப்பு

திருத்தணி:திருத்தணி ரயில்வே சுரங்கபாதையில் விபத்துகளை தடுக்கும் விதத்தில், சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து, திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலைக்கு செல்லும் ரயில்வே சுரங்கப் பாதை சுப்ரமணியபுரம் ஏரிக்கரை தெரு பகுதியில் அதிகளவில் விபத்து நடந்து வருகிறது. கடந்த ஓராண்டில், 10க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, கனரக வாகனங்கள், லாரி, வேன் மற்றும் பேருந்துகள் மோதி இறந்துள்ளனர்.இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகரன், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் ரகுராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஏரிக்கரை தெரு பகுதியில் நடக்கும் விபத்துக்கள் தடுக்க 'பிளாஸ்டிக்' தடுப்புகள், 750 மீட்டர் துாரம் அமைக்க தீர்மானித்தனர். இந்நிலையில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் ரயில்வே சுரங்கப்பாதையில், வாகனங்கள் முந்தி செல்வதை தடுக்கவும், விபத்துகள் தடுக்கவும், 'பிளாஸ்டிக்' தடுப்புகளை ஏற்படுத்தினர். இந்த தடுப்புகளால் விபத்துக்கள் தவிர்க்கப்படலாம் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி