உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

மணவாளநகர்:திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் ஜான், 30. இவர், கடந்த 29ம் தேதி நண்பர் அருண்குமார் என்பருக்கு, தன் இருசக்கர வாகனத்தை கொடுப்பதற்காக சென்றார்.அப்போது, ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே, குடிபோதையில் நின்று கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 26, நீலகண்டன், 28, கார்த்திக், 32, சூர்யா, 24, ஆகிய நால்வரும் ஜான் மற்றும் அருண்குமாரை வழிமறித்தனர்.அதன்பின், ஆபாசமாக பேசி பீர்பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜான் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், மோகனை கைது செய்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ