உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா பறிமுதல் பீஹார் வாலிபர் கைது

கஞ்சா பறிமுதல் பீஹார் வாலிபர் கைது

திருவள்ளூர்: கஞ்சா வைத்திருந்த பீஹார் வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருவள்ளூர் நகர போலீசார், நேற்று முன்தினம் மாலை நேதாஜி சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாபு, 27, என தெரிய வந்தது. அவரிடமிருந்து, 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், பாபுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை