உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

ஊத்துக்கோட்டை : வேலுார் மாவட்டம், தோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 66. இவர் பூண்டி அருகே, கன்னிமாபேட்டை கிராமத்தில் தங்கி, கோணி தைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு சாலையோரம் சிறுநீர் கழிக்க நின்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த பேஷன்ப்ரோ பைக் முனுசாமி மீது மோதியது.பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !