வீட்டு வாசலில் நிறுத்திய பைக் திருட்டு
திருவேற்காடு,:திருவேற்காடு, வள்ளி கொல்லைமேடு நான்காவது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 30. இவர், திருவேற்காடு, சிவன் கோவில் பிரதான சாலையில், 'தேஷ்னா மோட்டார்ஸ்' என்ற பெயரில் மல்டி பிராண்ட் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தன் 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கை சாவியுடன் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை 9:30 மணியளவில் எழுந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் படி திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.