பைக் திருடியவர் கைது
திருத்தணி:திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த சாய்ஈஸ்வரன், 43, என்பவரின் இருசக்கர வாகனம், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, சாய்ஈஸ்வரன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, அனுமந்தாபுரத்தைச் சேர்ந்த டோமினிக் அலெக்ஸ், 43, என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. நேற்று இரவு டோமினிக் அலெக்ஸை போலீசார் கைது செய்தனர்.