உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில், மயிலை மந்தை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் இருந்த பனைமரங்களை, கடந்தாண்டு அக்., மாதம், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெட்டியது.இதுகுறித்து, மீஞ்சூர் ஒன்றிய பா.ஜ., தலைவர் வருண்காந்தி, காவல் நிலையம், வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம் என, பல்வேறு தரப்பினரிடம் புகார் அளித்தார். ஆனால், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று அக்கட்சியினர் மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, 'தமிழகத்தில், பனை மரங்களை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு, அனுமதி இன்றி வெட்டுவது குற்றம்' என்றனர்.மேலுாரில், அனுமதியின்றி வீட்டுமனை விற்பனைக்காக, பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. பனை மரங்களை வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி