உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவியரை சீண்டிய வேன் கிளீனருக்கு போக்சோ

பள்ளி மாணவியரை சீண்டிய வேன் கிளீனருக்கு போக்சோ

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, பள்ளி வேனில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர்,'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இயங்கும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் வேனின் கிளீனராக, நசரத்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர், 32, என்பவர் பணியாற்றினார்.இவர், வேனில் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி ஒருவர், பெற்றோரிடம் கூற, அவர்கள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார், சம்பந்தப்பட்ட கிளீனர் ஞானசேகரை பிடித்து விசாரித்த போது, மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 03:43

போலீசார், சம்பந்தப்பட்ட கிளீனர் ஞானசேகரை பிடித்து விசாரித்த போது, மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அப்படி போடு அரிவாளால்


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 01:13

இந்த குற்றவாளியை கருங்கல் குவாரியில் கல்லுடைக்க குறைந்த பட்சம் ஒரு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டால் தான் திருந்த வழியுண்டு.


மேலும் செய்திகள்