உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் ஆற்றில் விழுந்து மாயமானவர் உடல் மீட்பு 

கூவம் ஆற்றில் விழுந்து மாயமானவர் உடல் மீட்பு 

திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த காடுவெட்டி தரைப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து மாயமானவர் உடல் மீட்கப்பட்டது. திருவேற்காடு, சக்கரேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 29. இவர், காடுவெட்டி பகுதியில் உள்ள 'பிரின்டிங் பிரஸ்'சில் பணிபுரிந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் பணி முடிந்து, கூவம் ஆற்றில் உள்ள பழைய காடுவெட்டி தரைப்பாலம் வழியாக நடந்து சென்றார். ஏற்கனவே தரைப்பாலத்தை உடைக்கும் பணி நடப்பதால், ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. எனவே, அவ்வழியாக செல்ல வேண்டாம் என, பொதுமக்கள் அவரை தடுத்தனர். அதையும் மீறி அவர் சென்றபோது, தரைப்பாலத்தில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த திருவேற்காடு போலீசார், ஆவடி தீயணைப்பு துறை உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை கூவம் ஆற்றில் கலங்கல் அருகே வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது. திருவேற்காடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ