உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 43. இவரது மகன் தீனா, 16. ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுதாகர் உறவினர் தமிழ்வாணன் நடத்தி வரும் ஆடியோ கடையில் பணி செய்து வரும் சதீஷ் என்பவருடன் சிறுவன் தீனா, அரண்வாயல் பகுதியில் உள்ள மகிமதி பார்ட்டி ஹாலுக்கு ஆடியோ செட் அமைக்கும் பணிக்கு சென்றார்.அங்கு பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தீனா துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த தீனாவை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி