உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜெகந்நாதர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

ஜெகந்நாதர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆனி பிரம்மோத்சவ திருவிழா நேற்று காலை 6:00 - 7:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை, தங்க தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.பிரம்மோத்சவ திருநாளில் தினமும் காலை - மாலை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நாளை காலையிலும், தேர் திருவிழா 10ம் தேதி காலையும் நடைபெறும்.வரும் 12ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி