வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ரோஷாநகரம் பகுதியில் வசிப்பவர் சுமன், 40; கோவில் அர்ச்சகர். இவரது மனைவி தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டு, மாலை திரும்பியபோது வீட்டின் முன் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10,000 ரூபாய், 40 கிராம் வெள்ளி பிரேஸ்லெட், மொபைல்போன் திருடுபோனது தெரிந்தது. பாதிரிவேடு போலீசார் விசரிக்கின்றனர்.