உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதர்மண்டிய காவல் நிலையம் விஷ ஜந்துக்களால் அச்சம்

புதர்மண்டிய காவல் நிலையம் விஷ ஜந்துக்களால் அச்சம்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் தேரடி அருகே டி-2 காவல் நிலையம் அமைந்துள்ளது. தற்போது 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், வழக்கறிஞர்கள் என தினமும், 20 முதல் 30 பேர் பல்வேறு புகார்களை அளிக்க காவல் நிலையம் வந்து செல்கின்றனர்.காவல் நிலையம் சுற்றி குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இந்நிலையில் காவல் நிலையத்தை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது.இந்த புதரில் பாம்பு, பூச்சிகள் என, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் காவல் நிலையத்திற்கு வருவோர், அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.எனவே காவல் நிலையத்தை சூழ்ந்துள்ள புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி