உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்து இயக்க கோரிக்கை

பேருந்து இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதால், ஜி.என்.டி., சாலை விசாலமாக காட்சியளிக்கிறது. இருப்பினும், பேருந்துகள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாக சென்று வருவது தொடர்கிறது. பேருந்து பயணியர் வசதி கருதி, அனைத்து பேருந்துகளையும் நகருக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ