மேலும் செய்திகள்
ரதவீதிகளை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
28-May-2025
திருமழிசை:திருவள்ளூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருமழிசை பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பிராட்வே, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளிலிருந்து, இந்த பேரூராட்சி வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் என, தினமும் 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.இந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் நுழைவுப்பகுதி குளமாக மாறுவதால், பேருந்து நிலையத்திற்கு வரும் அப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு பேருந்துகள் கடும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையம் நுழைவுப் பகுதியை சீரமைத்துத்தர வேண்டுமென, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-May-2025