மேலும் செய்திகள்
பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ. 378 கோடி இழப்பீடு
02-Dec-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ராபி பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில், நடப்பாண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 'அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்.,' என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.ராபி பருவத்தில், தற்போது நெற் பயிர் ஏக்கருக்கு 518, பச்சை பயறு 298, எள் 16 ரூபாயினை செலுத்தி, பிப்.17ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.வேர்க்கடலை ஏக்கருக்கு 462 ரூபாயினை வரும் 31க்குள்ளும், கரும்பு பயறுக்கு 1,200 ரூபாயினை மார்ச் 31க்குள்ளும் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு ஆண்டிற்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். பதிவு செய்த விபரம் சரியாக உள்ளதா என, விவசாயிகள் உறுதி செய்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
02-Dec-2024