மேலும் செய்திகள்
ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
23-May-2025
திருவள்ளூர்:கைவினைஞர் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து, உடனடி வேலைவாய்ப்பு பெற, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:'கைவினைஞர் பயிற்சி' திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2025 -26ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து, உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். மேலும், விபரங்களை தெரிந்து கொள்ள, 'உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர்' என்ற முகவரியில் நேரிலோ அல்லது gmail.comஎன்ற இ - மெயில் மற்றும் 94869 39263, 94441 39373 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-May-2025