உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் விதைகள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

நெல் விதைகள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலானோர் நெல், வேர்கடலை, கரும்பு போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடுகின்றனர். இந்நிலையில், வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து, திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் - பொறுப்பு பிரேம் கூறியதாவது:விவசாயிகள் அதிகளவில் பயிரிடும் நெல் வகையான குண்டு நெல், தற்போது திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.தற்போது, 12,000 கிலோ நெல் விதைகள் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் கணினி பட்டா, ஆதார் கார்டு போன்றவையுடன் வேளாண் மையங்களுக்கு நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை