உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் குப்பையால் அடைப்பு

கால்வாய் குப்பையால் அடைப்பு

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலையில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய்களில் மூடி இல்லாததால், சாலையில் இருக்கும் குப்பை காற்றில் பறந்து கால்வாயில் விழுந்து விடுகிறது.இதனால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி விடுகிறது. சில நேரங்களில் கால்வாயில் இருந்து கழிவுநீர், சாலைக்கு வந்து விடுகிறது. தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு சாலைகளில் உள்ள கால்வாய்களில் உள்ள மண் கழிவுகளை அகற்ற 6.30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை