ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு ஆட்டோக்கள்
திருத்தணி:திருத்தணி நகரில் 50க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்களில், திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு, இரும்பு கம்பிகள், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.இவ்வாறு கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக சிவப்பு துணி மற்றும் பொருட்கள் ஆகியவற்றை சரியாக கட்டாமல் கொண்டு செல்கின்றனர். இதனால், சரக்கு ஆட்டோக்களின் பின்புறம் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் சரக்கு ஆட்டோக்கள் பின்னால் செல்ல அச்சப்படுகின்றனர். உதாரணமாக, திருத்தணி மலைக்கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக, சரக்கு ஆட்டோ ஒன்று இரும்பு கம்பிகளை பாதுகாப்பின்றி ஏற்றிச் சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்டும், காணாமல் இருந்தனர்.எனவே, பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.