உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு

பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அடுத்த, வேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 30. கவரைப்பேட்டை அடுத்த, குருதானமேடு கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது, அருகில் ஓடை புறம்போக்கு நிலத்தில் இருந்த, 24 பனை மரங்களை முன் அனுமதியின்றி வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம் அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை போலீசார், சுரேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ